கோயம்புத்தூர்

தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ 1.60 கோடி மதிப்பிலான புதிய கட்டடம் திறப்பு

DIN

காரமடையை  அடுத்த தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட  புதிய கட்டடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,   காரமடையை  அடுத்த தோலம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் ரூ. 1.60 கோடி மதிப்பில் 8 வகுப்பறைகள்,  நூலகம்,  ஆய்வகம்,  2 கழிப்பிடங்கள் ஆகியவற்றை கொண்ட இருமாடி கட்டடம் கட்டப்பட்டது.  
இந்த புதிய பள்ளி கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.  அதைத் தொடர்ந்து புதிய கட்டடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,  கோவை ஆவின் இயக்குநர் பி.டி. கந்தசாமி,  ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இந்திராணி,  துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் சிவகுமார்,  உதவி செயற்பொறியாளர் ஷோபனா,  பொறியாளர் சிவகுமார் உள்பட கிராம மக்கள் பலர்கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT