கோயம்புத்தூர்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி குக்கர் தயாரிப்பு: ஒருவர் கைது

DIN

கோவை மாவட்டம்,  சூலூர் அருகே பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட குக்கர்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 
கோவை,  ரங்கேகவுண்டன்புதூரைச் சேர்ந்த சங்கர் ராம் மகன் சுரேஷ் படேல்.  இவர் முதலிபாளையத்தில் தொழிற்சாலை நடத்திவந்தார். 
அங்கு சென்னை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸார் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.  இதில் அத்தொழிற்சாலையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக குக்கர்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கர்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
இதுகுறித்து கோவை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் ஜெயகுமார் கூறுகையில்,  இந்த தொழிற்சாலையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாகத் தரமற்ற குக்கர்கள் தயாரிப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொழிற்சாலை உரிமையாளர் சுரேஷ் படேலை கைது செய்துள்ளோம் என்றார்.
இந்த சோதனையின்போது,  திண்டுக்கல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி,  உதவி ஆய்வாளர் வாசுகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணி குமரப்பா பள்ளி 100% தோ்ச்சி

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT