சம்பளத்தில் தொழில்வரி பிடித்தம்: தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் தொழில்வரி பிடித்தம் செய்வதற்கு தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுமார் 30,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினர் தங்கள் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக நகராட்சிக்கு தொழில்வரி செலுத்த வேண்டும் என்று கூறி ஆண்டுக்கு ரூ. 600 வரை தொழிலாளர்களின் சம்பளத்தில் நிர்வாகத்தினர் பிடித்தம் செய்து வருகின்றனர். இதற்கு தொழிலாளர்கல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொழிலாளர்களுக்குரிய தொழில்வரியை நிர்வாகத்தினரே செலுத்த முன்வர வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்க இருப்பதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.