முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கடைகள் அமைக்க எதிர்ப்பு: நில உரிமையாளர்களின் வீடுகள் முற்றுகை

சூலூர் அருகே புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து,  மதுக்கடைகள் அமையவிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களுடைய வீடுகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:15 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

சூலூர் அருகே புதிதாக மதுக்கடைகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து,  மதுக்கடைகள் அமையவிருக்கும் நிலங்களின் உரிமையாளர்களுடைய வீடுகளை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். 
சூலூர் அருகே கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 18 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் இப்பகுதிகளில் மதுக்கடை இல்லாத நிலை உருவானது.  
இந்நிலையில், எலச்சிபாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மதுக்கடைகளைத் திறக்க சிலர் ஏற்பாடு செய்தனர்.  அதைக் கண்டித்து போராட்டம் நடத்த சமூக ஆர்வலர்களுடன் பொதுமக்கள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். 
அந்தக் கூட்டத்தில்,  மதுக்கடை நடத்த இடம் அளித்த இடங்களின் உரிமையாளர்களிடம் இதுபற்றி ஞாயிற்றுக்கிழமை முறையிட முடிவு செய்தனர்.
அதன்படி, எலச்சிபாளையம் பகுதியில் மதுக்கடை அமைக்க இடம் கொடுத்தவர்களின் வீட்டை சமூக ஆர்வலர் சம்பத் தலைமையில் சுமார் 50 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது மதுக்கடை அமைக்க இடம் கொடுக்க வேண்டாம் என்று அவர்கள் கோரினர். இதை மீறி மதுக்கடை அமைத்தால் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.