கோயம்புத்தூர்

யானைகளால் கோயில்,  கடைகள் சேதம்

DIN

எஸ்டேட் பகுதிக்கு வந்த யானைகள், அங்கு உள்ள கோயில், கடை, குடியிருப்புகளைச் சேதப்படுத்தியுள்ளன.
வால்பாறை எஸ்டேட் வனப் பகுதியில் இருக்கும் யானைகள் உணவு, குடிநீர் தேடி அங்கிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. 
இந்நிலையில், வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 3 மணிக்கு 6 யானைகள் வந்துள்ளன. அவை, அங்குள்ள முனீஸ்வரன் கோயிலை முட்டித் தள்ளிச் சேதப்படுத்தியுள்ளன. பின்னர், அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரன் என்பவரது டீக்கடை மற்றும் முனியாண்டி என்பவரது குடியிருப்பு ஆகியவற்றையும் முட்டித் தள்ளிச் சேதப்படுத்தின. 
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத் துறையினர் விடியவிடிய போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT