கோயம்புத்தூர்

காளப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு உபகரணங்கள்

DIN

துடியலூரை அடுத்த காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு சோமையம்பாளையம் திமுக கிளை சார்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஆசிரியை வனஜாகுமாரி முன்னிலை வகித்தார். சோமையம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், திமுக ஊராட்சிச் செயலாளருமான ஆனந்தகுமார் தலைமை வகித்து, இப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், பாய் விரிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் பொ.ராமலிங்கம், மாணிக்கம், குமாரலிங்கம், கந்தசாமி,  பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT