கோயம்புத்தூர்

மாநகராட்சியை முற்றுகையிட்ட துப்புரவுத் தொழிலாளர்கள்

DIN

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு, சுகாதாரம், குடிநீர்ப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
 கோவை, லேபர் யூனியன் ஏஐடியூசி, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு, பொதுப் பணியாளர் சங்கம், ஜனசக்தி லேபர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல சராசரியாக மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ரூ. 15 கோடி ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்க நிர்வாகிகள் என்.செல்வராஜ், இரா.தமிழ்நாடு செல்வம், சி. பழனிசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT