கோயம்புத்தூர்

பனியன் தொழிற்சாலையில் தீ விபத்து

DIN

கருமத்தம்பட்டியை அடுத்த கோதைபாளையத்தில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. 
கருமத்தம்பட்டியை அடுத்து கோதைபாளையத்தில் பனியன் எலாஸ்டிக் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இதை ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ்குமார் பஜாஜ் என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்தத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எலாஸ்டிக் பனியன் பொருள்கள் எரிந்து நாசமாயின. இதைத் தொடர்ந்து திருப்பூரில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாயின. மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT