கோயம்புத்தூர்

கோவையில் செப்டம்பர் 8இல் ஊழல் எதிர்ப்புக் கருத்தரங்கு: கர்நாடக ஐ.ஜி. ரூபா பங்கேற்பு

DIN

கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஜி. டி.ரூபா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
 இது குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் துரை.குமாரவேலு, பொருளாளர் பி.கந்தசாமி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
 ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ஆவது வாரத்தில் ஊழல் எதிர்ப்புக் கருத்தரங்கு நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு கருத்தரங்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அரங்கில் வரும் 8ஆம் தேதி (சனிக்கிழமை ) நடைபெறுகிறது.
 இதில், கர்நாடக சிறைத் துறையில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்த நேர்மையானவரும், ஐ.ஜி. பொறுப்பு வகிப்பவருமான டி.ரூபா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிப் பாராட்ட உள்ளார்.
 மேலும், நேர்மையான பணிக்காகத் தேர்வு செய்யப்பட்ட 18 அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கும், லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகளை சட்டத்தின் முன்பு நிறுத்துவதற்கு துணிச்சலுடன் செயல்பட்ட 9 பேருக்கும் ரூபா விருது வழங்கி கெளரவிக்க உள்ளார்.
 முன்னதாக, ஊழல் வளரப் பெரிதும் காரணம் யார் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. கவிஞர் கவிதாசன் இதற்கு நடுவராக இருந்து வழிநடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT