கோயம்புத்தூர்

ஓடும் வேனில் திடீர் தீ விபத்து

DIN

கோவை கணபதி பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் பம்ப்செட் கடை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான வேனை ஓட்டுநர் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை மாலை ஓட்டிச் சென்றுள்ளார். டெக்ஸ்டூல் மேம்பாலத்தின் மீது சென்றபோது, வேனின் பின் பகுதியில் எரிவாயு டேங்க் அருகில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு வெளியேறினார்.
 இதையடுத்து சில நிமிடங்களில் வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு மீட்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் வீரர்கள் வருவதற்குள் வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். 
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT