கோயம்புத்தூர்

செங்காளியப்பன் நினைவு தினம்: பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை

DIN

தியாகி செங்காளியப்பன் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம்(ஐ.என்.டி.யு.சி.) சார்பில் பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிற்சங்கத் தலைவரும், தியாகியுமான செங்காளியப்பனின் 12ஆம் ஆண்டு நினைவுதினம் கோவையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய பஞ்சாலைத் தொழிளாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கோவை செல்வன் வரவேற்றார்.
இதில், 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பஞ்சாலைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.16 லட்சத்துக்கான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை மூத்த வழக்குரைஞர் எஸ்.துரைராஜ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், சங்கப் பொருளாளர் பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் ஆதிகேசவன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஷோபனா செல்வன், வெங்கிடுசாமி, நாகராஜன், ஆறுச்சாமி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT