கோயம்புத்தூர்

உடனே சம்பளம் வழங்குவதாக உறுதி:  டேன்டீ தொழிலாளர் போராட்டம் ரத்து

DIN

உடனடியாக சம்பளம் வழங்குவதாக நிர்வாகம் உறுதியளித்ததால்,  டேன்டீ தொழிலாளர்கள் போராட்ட முடிவைக் கைவிட்டனர்.
கடந்த சில மாதங்களாகவே சின்கோனா (டேன்டீ) எஸ்டேட்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தினர் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்கவில்லை. 
இம்மாதமும் 7 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை இதுவரை வழங்கவில்லை. 
இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்த  புதன்கிழமை தயாராயினர்.  
இதை அறிந்த டேன்டீ நிர்வாகத்தினர் தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு வியாழக்கிழமை சம்பளம் வழங்குவதாக உறுதியளித்தனர். எனவே, தொழிலாளர்கள் போராட்ட முடிவைக் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT