கோயம்புத்தூர்

பி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களின்இலவச விடுதியில் மாணவியர் சேர்க்கை

DIN

கோவை, பி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்களின் இலவச விடுதியில் சேர 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பி.எஸ்.ஜி.கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளஅறிக்கை: 
பி.எஸ்.ஜி. கன்யா குருகுலம் கல்வி நிறுவனங்கள் மற்றும் கெங்காநாயுடு அறக்கட்டளை நிறுவப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனங்களின் கீழ் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஆரம்பப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியும் நடத்தப்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளுடன் இணைந்த இலவச உணவு விடுதியில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவியர், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குடும்ப வருமானம் 1 லட்சத்துக்கும் கீழ் உள்ள மாணவியருக்கு விடுதியில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.  இதில், 4 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள மாணவியர்இலவச உணவு விடுதியில் சேர்ந்துகொள்ள, தங்கள் பேற்றோர் அல்லது காப்பளர்கள் உதவியுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பங்கள் மே 1ம் தேதிக்குள் வழங்க  வேண்டும். இந்த வாய்ப்பினை படிப்பில் ஆர்வமும், திறமையும் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT