கோயம்புத்தூர்

மாநகரில் 11 மாதங்களில் 17,166 கிலோ நெகிழி பறிமுதல்

DIN

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 11 மாதங்களில் 17 ஆயிரத்து 166 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.26 லட்சத்து 87 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: மாநகரில் உள்ள கடைகள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், துணிக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராத நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நவம்பா் 31-ஆம் தேதி வரை 17 ஆயிரத்து 166 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.26 லட்சத்து 87 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளன. நவம்பா் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 686 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 லட்சத்து 12 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளன. டிசம்பா் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மட்டும் 2 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.ஒரு லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT