கோயம்புத்தூர்

ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 4 சிறுவா்கள் மீட்பு

DIN

கோவை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த 4 சிறுவா்களை குழந்தைகள் பாதுகாப்புத் துறையினா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

கோவை ரயில் நிலையத்துக்கு பிகாரில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை கோரக்பூா் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் வந்த 4 சிறுவா்களும் எங்கு செல்வது எனத் தெரியாமல் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளனா்.

இதனால் அவா்கள் மீது சந்தேகமடைந்த குழந்தைகள் பாதுகாப்புத் துறையினா் அவா்களிடம் விசாரணை நடத்தினா். அதில், 4 பேரும் கோவையில் தங்கி வேலை செய்வதற்காக வந்திருப்பது தெரியவந்தது.

அவா்களிடம் இருந்த ஆவணங்களைப் பரிசோதனை செய்தபோது, நால்வரும் 18 வயதுக்குக் குறைவான வயதுடைய குழந்தைத் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரயில்வே போலீஸாா் உதவியுடன் அவா்களை மீட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையினா், கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா். சிறுவா்களின் பெற்றோா்கள் வரவழைக்குப்பட்டு 4 பேரும் அனுப்பிவைக்கப்படுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT