கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கம்

DIN

மேட்டுப்பாளையம்-உதகை இடையே 8 நாள்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் கடந்த 2 ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே 8 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மலை ரயில் இயக்க சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணிக்கு குன்னூருக்கு மலை ரயில் இயக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT