கோயம்புத்தூர்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியின்போது மாரடைப்பால் சாவு

DIN

துடியலூரை அடுத்த ஆனைகட்டி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த தடாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் திடீரென மாரடைப்பால் வெள்ளிக்கிழமை மாலை இறந்தார். 
தடாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன். இவர் தமிழக - கேரள மாநில எல்லையான ஆனைகட்டி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் பணியில் இருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அருகிலிருந்த காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் இவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனுக்கு கஸ்தூரி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசளித்த ஷாலினி!

டி20 உலகக் கோப்பை: ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி!

சல்மான் கான் வீடருகே துப்பாக்கிச் சூடு: குற்றவாளி தற்கொலை முயற்சி

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

SCROLL FOR NEXT