கோயம்புத்தூர்

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

DIN

குடும்பத் தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (45), கூலி தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி (33). குமாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் இவர்களது மகன் மருதுபாண்டி, ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்திருந்தார். இருப்பினும் அன்றைய தினம் மது அருந்திவிட்டு குமார் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உமா மகேஸ்வரியின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். 
இதில் படுகாயமடைந்த அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு 15 நாள்களுக்குப் பிறகு உமா மகேஸ்வரி உயிரிழந்தார். உமா மகேஸ்வரியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் குமாரைக் கைது செய்தனர்.   இந்த வழக்கு கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 
விசாரணை முடிவில் குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.குணசேகரன் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT