கோயம்புத்தூர்

ரூ.14 லட்சம் கையாடல் செய்ததாக பெண் மீது புகார்

DIN

பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள ஆஸ்ரமத்தில் ரூ.14 லட்சம் கையாடல் செய்ததாக பெண் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆழியாறில் ஆஸ்ரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்ரமத்தில் யோகா மற்றும் உடல் ஆரோக்கிய பயிற்சிகள் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆஸ்ரமத்தில் கணக்காளராகப் பணிபுரியும் சமத்தூரைச் சேர்ந்த வளர்மதி (41) மீது ஆஸ்ரமத்தின் நிர்வாகி வினய்கோபால்  ஆழியாறு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
அதில், ஆஸ்ரமத்துக்கு பயற்சிக்காக வருபவர்களிடம் பணம் பெற்றுவிட்டு, அந்தத் தொகையைவிட குறைவான தொகைக்கு ரசீது வழங்கி கடந்த சில மாதங்களில் ரூ.14 லட்சம் வரை வளர்மதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, ஆழியாறு போலீஸார் வளர்மதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT