கோயம்புத்தூர்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

DIN

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து நகையைக் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க போலீஸார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் சௌடம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கரியம்மாள் (83). சில ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி இறந்துவிட்டார். இதையடுத்து, தனது இளைய மகன் ஆறுமுகத்துடன் கரியம்மாள் வசித்து வந்தார்.
இந்நிலையில், ஆறுமுகம் சனிக்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டார். அப்போது, கரியம்மாளின் உறவினர் பெண் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறந்தநிலையில் இருந்துள்ளது. பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் உடலில் காயங்களுடன் கரியம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஆறுமுகத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கரியம்மாளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கொலை செய்யப்பட்ட கரியம்மாளின் கழுத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தெரியவந்தது.
கொலை நடந்த வீட்டுக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட கரியம்மாளின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகைத் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
மூதாட்டி கொலை செய்யப்படுவதற்கு முன்பு பிற்பகலில் ஆறுமுகம் உணவு இடைவேளைக்காக வந்தபோது மூதாட்டி உயிருடன் இருந்துள்ளார். அவர் சென்ற பிறகே கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகளை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் போலீஸார் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT