கோயம்புத்தூர்

தோண்டப்பட்ட பகுதிகளில் தார் சாலை: இடையர்பாளையம் மக்கள் கோரிக்கை

DIN


கோவை இடையர்பாளையம் பகுதியில் புதிய சாலைக்காக தோண்டப்பட்ட இடங்களில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடையர்பாளையம் அருகே உள்ள முல்லை நகர், மருத நகர், குறிஞ்சி நகர், நடராஜ் நகர், பூம்புகார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 க்கும் மேற்பட்ட சாலைகள் கடந்த 20 நாள்களுக்கு முன்பு திடீரென தோண்டப்பட்டன. சீரமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை அந்தப் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமலும், பாதசாரிகள் நடக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், ஜல்லிக் கற்களுக்கு இடையே சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதால் இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT