கோயம்புத்தூர்

வங்கித் தணிக்கை குறித்த பயிலரங்கம்

DIN

துடியலூரிலுள்ள இந்திய பட்டயக் கணக்காளர் சங்க கோவை கிளையின் சார்பில் வங்கித் தணிக்கை குறித்த பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தென்மண்டல பட்டயக் கணக்காளர் சங்கத்தின் செயலர் கே.ஜலபதி தலைமை வகித்தார். இந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு சேவைப் பிரிவின் தலைவர் திரஜ்குமார் கண்டவால்,  உதவித் தலைவர் சரண்ஜாட் சிங் நந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் பி.பாலசுப்பிரமணி வரவேற்றார். கோவை மாவட்ட கனரா வங்கியின் மண்டலத் தலைவர் ஜி.கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிலரங்கைத் தொடக்கிவைத்துப் பேசினார்.  தொடர்ந்து நடந்த அமர்வுகளில் பட்டயக் கணக்காளர்கள் ஆர்.விட்டல்ராஜ், ஏ.மோனி, பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொதுமேலாளர் கே.ஜி.நந்தகோபால் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். எஸ்.பிரபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT