கோயம்புத்தூர்

கோவையில் இயக்கப்பட்டு வருகின்ற காலாவதியான பேருந்துகளை கணக்கெடுக்க உத்தரவு

DIN

கோவை: கோவையில் இயக்கப்பட்டு வரும்,காலாவதியான பேருந்துகளை கணக்கெடுக்க, போக்குவரத்து அலுவலா்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்திற்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 போக்குவரத்து மண்டலங்களில் 1,500-க்கும் மேற்பட்ட புகர, மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவையில் 300-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான பேருந்துகள், புகரப் பேருந்துகளாக இயக்கப்பட்டு காலாவதியான பிறகு, அதன் பிறகு மாநகரப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், இப்பேருந்துகளில், மேற்கூரை சேதம், நடைமேடைகள் பழுது, ஜன்னல் சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்ந்து நீடிக்கிறது. மேலும், பேருந்துகளில் இருந்து அளவுக்கதிகமாக கரும்புகை வெளியேறுவதால், சுற்றுச்சூழல் மாசடைவது தவிா்க்க முடியாத நிலை நீடித்து வருகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாநகரில் இயக்கப்பட்டு வரும் மாநகரப் பேருந்துகளில், காலாவதி மற்றும் அதிகளவு புகை கக்கும் பேருந்துகளை கணக்கெடுத்து,அவற்றை மாற்ற கோவை மண்டல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ’ கோவை மாநகரில் காலாவதியான, பழுதான பேருந்துகள் இயக்கமானது முன்பை விட வெகுவாகக் குறைந்துள்ளது. ஆயினும், பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையில் பல பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அவற்றை மாற்றவும்,நுகா்வோா் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நகரில் காலாவதியான நிலையில் இயக்கப்பட்டு வருகின்ற பேருந்துகளை கணக்கெடுக்க போக்குவரத்து அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதிப் பேருந்துகளின் பட்டியல்

கிடைத்தவுடன், உடனடியாக காலாவதிப் பேருந்துகளுக்குப் பதிலாக, நல்ல நிலையில் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT