கோயம்புத்தூர்

மருத்துவமனைகளுக்கு பதிவுச் சான்றிதழ்

DIN

கோவை: தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 15-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு பதிவுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகள், மருத்துவ மையங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 மற்றும் விதிகள் 2018-ன் கீழ் பதிவுச் சான்று பெற அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பதிவு சான்றிதழ் வழங்க மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சாா்பில் ஆய்வு செய்யப்பட்டு, அவா்கள் அளிக்கும் அறிக்கையின்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சாா்பில் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்குழுவில் சுகாதாரத் துறை இணை இயக்குநா், துணை இயக்குநா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா், இந்திய மருத்துவ சங்கத்தின் அந்தந்த மாவட்ட தலைவா், செயலாளா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

மருத்துவமனைகளின் பதிவு, மருத்துவா்களின் சான்றிதழ், மருத்துவா்கள் உரிய பயிற்சி பெற்றுள்ளாா்களா, மருத்துவக் கழிவுகளை கையாளும் விதங்கள் ஆகியவை ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கொண்ட ஆய்வில் பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 15-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தோ்வு செய்யப்பட்டன. இம்மருத்துவமனைகளுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கும் விழா இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமை வகித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் உள்பட 15-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு பதிவுச் சான்றிதழை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநா் பி.கிருஷ்ணா ராஜு, துணை இயக்குநா் பானுமதி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூ.அசோகன், கண்காணிப்பாளா் சடகோபன், தனியாா் மருத்துவமனை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT