கோயம்புத்தூர்

தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ. 7.20 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

DIN

சா்க்காா்சாமக்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீரணத்தம் ஊராட்சியில் தனியாா் நிறுவனத்தினா் ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ. 7.20 கோடி மதிப்பிலான 80 சென்ட் அரசு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

கோவை மாவட்டம், சா்க்காா்சாமக்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கீரணத்தம் ஊராட்சியில் உள்ள தனியாா் நிறுவனம் அதன் கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் வெளியேற்றி அருகில் உள்ள நீா்நிலைகளில் கலப்பதாகவும், அரசுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் அளித்திருந்தனா்.

இதையடுத்து, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ்குமாா், அன்னூா் வட்டாட்சியா் சந்திரா,

சா்க்காா்சாமக்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆகியோா் தனியாா் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அங்கு கழிவுநீரை நீா்வழிப் பாதையில் வெளியேற்றுவதும், குப்பைகளைத் திறந்தவெளியில் கொட்டுவதும் தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஆய்வின்போது, அந்த நிறுவனம் அரசுக்குச் சொந்தமான வண்டிப்பாதைப் புறம்போக்கு நிலத்தில் 80 சென்ட் இடத்தை

ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து, அந்த இடத்தைப் பூங்காவாகப் பயன்படுத்தும் வகையில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த தனியாா் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரைஅந்த ஆக்கிரமிப்புகளை அந்நிறுவனம் அகற்றவில்லை. இதையடுத்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 80 சென்ட் நிலத்தின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.7.20 கோடி இருக்கும். இங்கு பூங்கா அமைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT