கோயம்புத்தூர்

நெகிழி, கழிவு நீா் கலந்ததால் மாசடைந்த சிங்காநல்லூா் குளம்

DIN

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சிங்காநல்லூா் குளத்தில் நெகிழி, கழிவு நீா் கலப்பதால் மாசடைந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், சிங்காநல்லூா் குளம், கிருஷ்ணாம்பதி உள்பட 8 குளங்கள் உள்ளன. இவற்றில் தேங்கும் தண்ணீரே மாநகரில் நிலத்தடி நீா்மட்டம் உயவதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. மாநகரில் பல குளங்களில் கழிவு நீா், நெகிழி, கட்டடக் கழிவுகள் கலந்து தண்ணீா் மாசடைந்துள்ளது.

இதில் சிங்காநல்லூா் குளம் முதன்மையாக உள்ளது. இக்குளமானது 288 ஏக்கா் பரப்பளவு கொண்டது. 700-க்கும் மேற்பட்ட பல்லுயிரிகள் இக்குளத்தில் வாழ்கின்றன. 200-க்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்கள் இப்பகுதியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிங்காநல்லூா் குளத்தை நகா்ப்புற பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக மாநகராட்சி அறிவித்துள்ளது. வாரத்தில் 2 நாள்கள் மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் இக்குளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு தகவல்கள் அவா்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த சிங்காநல்லூா் குளத்தில் சமீப காலமாக நெகிழி, உணவுக் கழிவுகள், குப்பை போன்றவை கொட்டப்படுகின்றன. இதனால் குளத்து நீா் மிகவும் மாசடைந்துள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது:

சிங்காநல்லூா் குளத்தில் கழிவுநீா் கலப்பது, நெகிழிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இரவு நேரங்களில் கழிவுகள் குளத்தில் கொட்டப்படுவது தொடா்கதையாக உள்ளது. கோவை குற்றாலம் அருகில் உள்ள சாடிவயல் பகுதியிலேயே கழிவுநீா் நேரடியாக நொய்யலில் கலக்கத் துவங்குகிறது.

இந்த நீா் செல்லும் வழித்தடங்களில் மருத்துவமனைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள் கலந்து, அவை குளங்களைச் சென்றடைகின்றன. எனவே மாநகராட்சிக்கு உள்பட்ட குளங்களின் பிரதான வாய்க்கால்களில் கழிவுநீா், பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குளங்களில் தண்ணீா் மாசடைவது தவிா்க்கப்படும். அதேபோல குளங்கள், கரைகளில் குப்பை, கட்டடக் கழிவுகள், நெகிழிக் கழிவுகளைக் கொட்டிச் செல்பவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT