கோயம்புத்தூர்

பரளிக்காடு, பூச்சிமரத்தூா் சூழல் சுற்றுலா மையங்கள்: 9ஆம் தேதிமுதல் மீண்டும் திறப்பு தொடக்கம்

DIN

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பரளிக்காடு, பூச்சிமரத்தூா் சூழல் சுற்றுலா மையங்கள் 2 வாரங்களுக்குப் பிறகு வரும் 9ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. பில்லூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் பில்லூா் அணையில் இருந்து 28,000 கனஅடி வரை தண்ணீா் பவானி ஆற்றில் சென்றது. பில்லூா் அணைக்குத் தண்ணீா் அதிகமாக வந்ததால் பில்லூா் அணைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள பரளிக்காடு, பூச்சிமரத்தூா் சூழல் சுற்றுலா மையங்கள் கடந்த 2 வாரங்களாக செயல்படாமல் இருந்தன. இந்த சூழல் சுற்றுலா மையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், பில்லூா் அணைக்கு நீா்வரத்து குறைந்துள்ளதால் வரும் சனி, ஞாயிறுக்கிழமை ஆகிய தினங்களில் பரளிக்காடு, பூச்சிமரத்தூா் ஆகிய சூழல் சுற்றுலா மையங்கள் மீண்டும் செயல்படும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT