கோயம்புத்தூர்

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயற்சி 4 பேரிடம் வனத் துறையினா் விசாரணை

DIN

கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரம், தானிகண்டி வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்த முயன்ற நான்கு பேரைப் பிடித்து வனத் துறையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி மலை அடிவாரம், போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்துவதாக வனத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத் துறையினா் தானிகண்டி பகுதியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தன மரங்கள் வேரோடு வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அப்பகுதியில் கிடந்த சுமாா் 3 கிலோ எடையுள்ள சந்தன மரத் துண்டுகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த செல்வம், லட்சுமணன், சின்னான், வெள்ளிங்கிரி ஆகிய நான்கு பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT