கோயம்புத்தூர்

அன்னூரில் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

DIN

அன்னூா்: அன்னூரில் கிழக்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 60 சதவீத விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

அன்னூரில் கிழக்கு புறவழிச்சாலை அமைப்பது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டப்பொறியாளா் ராணி தலைமை வகித்தாா். உதவி கோட்டப்பொறியாளா் சுஜாதா, வட்டாட்சியா் சந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், புறவழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை எடுப்பதை அரசு கைவிட வேண்டும் என்று பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், விவசாய நில பாதுகாப்பு இயக்கம் சாா்பில் டிசம்பா் 1-ஆம் தேதி புறவழிச் சாலைக்கு தங்கள் விவசாய நிலங்களை தர மறுத்து உறுதிமொழி எடுக்கப் போவதாக தெரிவித்தனா்.

அன்னூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT