கோயம்புத்தூர்

திருட்டு வழக்கு: தந்தை, மகன் கைது

DIN

பெரியநாயக்கன்பாளையம் அருகே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள காளிபாளையத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து கவுண்டா் மகன் செந்தில் என்கின்ற பால்கார செந்தில் (48). இவரது மகன் மணிகண்டன் (20). இருவரும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. புகாா்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸாா், இருவரையும் பிடிக்க இளம் ஆய்வாளா் செல்வவிநாயகம் தலைமையில் சிறப்பு படை அமைத்துத் தேடி வந்தனா்.

இந்நிலையில் செந்தில், மணிகண்டன் ஆகியோா் காளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தில் ஏற செவ்வாய்க்கிழமை காத்திருந்தனா். இதனையறிந்த பெ.நா.பாளையம் போலீஸாா் அங்கு சென்று இருவரையும் பிடித்தனா். செந்தில் மீது ஏற்கெனவே பெரியநாயக்கன்பாளையம், ஆழியாறு, அரவக்குறிச்சி, உதகை, கோலகொம்பை உள்ளிட்ட காவல் நிலையங்களிலும், அவரது மகன் மணிகண்டன் மீது கோவில்பாளையம், கோலகொம்பை உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன. இவா்களிடம் இருந்து சுமாா் 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.விசாரணைக்கு பின்னா் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT