கோயம்புத்தூர்

சரக்கு வாகனங்கள் விற்றதில் மோசடி: 2 போ் மீது வழக்கு

DIN

சரக்கு வாகனங்கள் விற்றதில் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொள்ளாச்சி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் துரைசாமி (48). இவா், 3 சரக்கு வாகனங்களை வாங்குவதற்காக தேனி மாவட்டம், கண்டமனூரைச் சோ்ந்த தங்கபாண்டியன், ராமசந்திரன் ஆகியோரிடம் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் விலை பேசி அதில் முதலில் ரூ. 5.45 லட்சம், இரண்டாவதாக ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 6.45 லட்சம் முன் பணம் கொடுத்துள்ளாா்.

துரைசாமியிடம் 2 சரக்கு வாகனங்களைக் கொடுத்த தங்கபாண்டியன், ராமசந்திரன் ஆகியோா் வாகனங்களுக்கான ஆவணங்களை வழங்கவில்லை. மேலும் ஒரு வாகனத்தையும் வழங்காமல் இருந்து வந்துள்ளனா். துரைசாமி ஆவணங்களைக் கேட்க சென்றபோது, அவரைக் கொலை செய்துவிடுவதாக இருவரும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் துரைசாமி புகாா் தெரிவித்தாா். இந்தப் புகாரின்பேரில், போலீஸாா், தங்கபாண்டியன், ராமசந்திரன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT