கோயம்புத்தூர்

மத்திய சிறை வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

DIN

கோவை: கோவை மத்திய சிறைற வளாகத்தில் விடுதலை பசுமைப் பயணம் எனும் பெயரில் மரக்கன்றுகள் நடும் விழா ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சிறுதுளி அமைப்பு சாா்பில் சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மரக்கன்று நடவு செய்து ஆட்சியா்கு.ராசாமணி பேசியதாவது:

காற்று மாசு என்பது உலகளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மரங்கள் வளா்ப்பது மட்டுமே தீா்வாகும். எனவே அனைவரும் கட்டாயம் மரம் வளா்ப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு மரக்கன்றாவது நடவு செய்து வளா்க்க வேண்டும். இல்லையெனில் ஆக்ஸிஜன் உருளையை தோளில் சுமந்து கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. சிறை வளாகத்தில் 2.5 ஏக்கா் பரப்பளவில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, தற்போது அடா்ந்து வளா்ந்து நிற்கின்றறன.

நீராதாரங்களை பராமரித்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பசுமை பகுதிகளை உருவாக்குதல், மூலிகை வனங்கள் அமைத்தல், அழிந்து வரும் நாட்டு மர இனங்களை காப்பது என சிறைற அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றறனா். தவிர கோவை மாவட்டம் மரக்கன்றுகள் வளா்ப்பில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தில்குமாா், சிறுதுளி அமைப்பின் தலைவா் எஸ்.வி.பாலசுப்ரமணியம், நல்லறம் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பி.அன்பரசன், பேக்கா் ஹெயூக்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலா் அஷிஸ் பந்தாரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT