கோயம்புத்தூர்

திறந்தவெளி ஆழ்துளைக் கிணறுகளில் மூடி அமைக்கும் பணி தீவிரம்

DIN

அன்னூா் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களில் உள்ள திறந்தவெளி ஆழ்துளைக் கிணறுகளுக்கு மூடி அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

அன்னூா் மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சி பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அன்னூா் ஒன்றியத்தில் அரசு சாா்பில் 311 ஆழ்துளைக் கிணறுகள், தனியாா் சாா்பில் 212 ஆழ்துளைக் கிணறுகள் என மொத்தம் 523 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.

இதில் பயன்படுத்தாத 36 ஆழ்துளைக் கிணறுகள் மழைநீா் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், மூடியிடப்படாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு மூடி அமைக்கும் பணியும் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகின்றன.

எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் முதல்கட்ட கணக்கெடுப்பில் 87 ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது தெரியவந்தது. இதில் மூடியிடப்படாத ஆழ்துளைக் கிணறுகளுக்கு மூடி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்துள்ளாா்.

மதுக்கரையில்....

கோவை, சுந்தராபுரம் மோகன் நகா் பகுதியில் பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணற்றை அப்பகுதி மக்கள் இரும்புத் தகடுகளை கொண்டு வெல்டிங் செய்து புதன்கிழமை அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT