கோயம்புத்தூர்

பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்திய நட்புறவுக் கழகம் சார்பில் பாரதியார் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சமூக மாற்றம், முன்னேற்றத்தை விரும்புபவர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுபவர் பாரதியார்.
 பாரதியாரின் பிறந்தநாள், நினைவு தினங்களில் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தும் வகையில்  கோவை நகரில் உள்ள பாரதிப் பூங்காவில் பாரதியாரின் சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என நிகழ்ச்சியில் பங்கேற்றோர் வலியுறுத்தினர்.
இதில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியரும், பெருமன்றத்தின் தலைவர் வெ.சுப்ரமணியன், வழக்குரைஞர் எஸ்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் கந்தசுப்பிரமணியம், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT