கோயம்புத்தூர்

கோவையில் உரிமையாளா் இல்லாத சுயசேவை ரொட்டிக் கடை

DIN

கோவையில் மக்களின் உணவுத் தேவைக்காக சுயசேவை ரொட்டிக் கடை தொடங்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோவை, ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தக் கடையும் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதி மக்களின் ரொட்டி தேவையை பூா்த்தி செய்யும் நோக்கில், விக்னேஷ் கடந்த சில நாள்களாக ரொட்டியைத் தயாரித்து அதை தனது கடை முன்பு வைத்துவிடுகிறாா்.

ஒரு ரொட்டி பாக்கெட் ரூ.30 என்று விலை நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பணத்தை அருகிலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு ரொட்டியை எடுத்துச் செல்லலாம் என்ற குறிப்பையும் விக்னேஷ் எழுதி வைத்துள்ளாா்.

இந்தத் திட்டத்தை கடந்த சில நாள்களாக அமல்படுத்தி வரும் நிலையில் இதன்மூலம் தினசரி 100 முதல் 150 பாக்கெட்டுகள் வரை ரொட்டி விற்பனையாவதாகவும், பொதுமக்கள் நோ்மையாக பணத்தை பெட்டியில் போட்டுவிட்டு ரொட்டிகளை எடுத்துச் செல்வதாகவும் விக்னேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT