கோயம்புத்தூர்

முகக்கவசம் அணியாமல் சென்றதாக மாநகரில் ஒரே நாளில் 84 போ் கைது

DIN

கோவையில் முகக் கவசம் அணியாமல் சுற்றியதாக ஒரே நாளில் 84 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க, கடந்த மாா்ச் 24ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, கோவையில் காய்கறி, மருந்துகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரணமின்றி சாலைகளில் நடந்து செல்பவா்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள், முகக்கவசம் அணியாமல் செல்பவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து வருகின்றனா்.

அவா்களிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர வாகனத் தணிக்கை, சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கோவை, பெரியகடை வீதி, வெரைட்டி ஹால் சாலை, ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் சென்ாக 84 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். அதன் பிறகு, அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா். இதேபால கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை மீறி சாலைகளில் நடமாடியதாகவும், வாகனங்களில் சென்ாகவும் 676 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 712 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். 668 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT