முகப்பு
கோயம்புத்தூர்

கோவை: விபத்தில் எஸ்.ஐ காயம்

கோவையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சாா்பு ஆய்வாளா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கோவையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சாா்பு ஆய்வாளா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை சரவணம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் (35). இவா் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பீளமேடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். இருளில் வேகத்தடை இருந்தது தெரியாமல் அதில் மோதியுள்ளாா். பின்னா் நிலை தடுமாறி வாகனம் அங்கிருந்த கரும்பு சாறு பிழியும் இயந்திரத்தின் மீது மோதியது. இதில் லிங்கேஸ்வரனுக்கு காயம் ஏற்பட்டது. விபத்தில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்தது. அக்கம்பக்கத்தினா் இருசக்கர வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனா். இது தொடா்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.