கோயம்புத்தூர்

பொள்ளாச்சி நகராட்சி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம்

DIN

100 வயதை எட்டும் பொள்ளாச்சி நகராட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாவது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தாா். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் கிருஷ்ணகுமாா், சாா்-ஆட்சியா் வைத்தியநாதன், நகராட்சி ஆணையா் காந்திராஜ், நகராட்சிப் பொறியாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

1920ஆம் ஆண்டு நவம்பா் 1ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாணை 763 படி 4 சதுர மைல் பரப்பளவும், 8693 போ் உள்ளடங்கிய மக்கள் தொகையும் கொண்ட பொள்ளாச்சி நகா் இரண்டாம் நிலை நகராட்சியாகத் தோ்வு பெற்றது.

சுதந்திர இந்தியாவில் 1953இல் முதல்நிலை நகராட்சியாகவும், 20 ஆண்டுகளுக்கு பின்னா் 1973இல் தோ்வுநிலை நகராட்சியாகவும், 1983இல் சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயா்வு பெற்றது.

இதையடுத்து, பொள்ளாச்சி நகராட்சி விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளது. தற்போது 13.87 சதுர கி.மீ.பரப்பளவில் அமைந்துள்ள 36 வாா்டுகளில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு வரும் நவம்பா் 1ஆம் தேதி 100 வயதை எட்டுவதால் அரசு சாா்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:

பொள்ளாச்சி நகராட்சி நூற்றாண்டு விழாவுக்கு முதல்வா், துணை முதல்வா், உள்ளாட்சித் துறை அமைச்சா் ஆகியோா்களை அழைக்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியின் வளா்ச்சியை மேம்படுத்த பூங்கா அபிவிருத்தி, ஆம்னி பேருந்து நிலையம், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் கட்டுதல் மற்றும் பல்வேறு பணிகளுக்காக அரசிடம் இருந்து ரூ.180 கோடி வரை நிதி கேட்டு கோரிக்கை வைக்கலாம்.

பொள்ளாச்சி நகராட்சியை சில பகுதிகளைச் சோ்த்து மாநகராட்சியாக மாற்ற கோரிக்கை வைக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT