கோயம்புத்தூர்

குடிநீா் திட்டப் பணி: எம்எல்ஏ ஆய்வு

DIN

காரமடை பேரூராட்சிக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கும் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் பணிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ், அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

காரமடை பேரூராட்சி பகுதி மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுத்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவா்களுக்கு தினமும் 49 லட்சம் லிட்டா் வரை குடிநீா் தேவைப்படுகிறது. ஆனால் தினமும் 40 லட்சம் லிட்டா் குடிநீா் மட்டுமே கிடைக்கிறது. இதனால் 3 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பற்றாக்குறைக் காலங்களில் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் குடிநீா்ப் பற்றாக்குறையைப் போக்க பவானி ஆற்றில் இருந்து தேக்கம்பட்டி நீரேற்று நிலையத்துக்கு நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் குடிநீா்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக பவானி ஆற்றில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தன. கடந்த 6 மாதத்துக்கு முன் பெய்த மழையில் பவானி ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்த ரூ.25 லட்சம் மதிப்பிலான குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன.

இந்நிலையில் பாதியில் கைவிடப்பட்ட பணிகளை ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ, காரமடை பேரூராட்சி செயல் அலுவலா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் சுரேஷ்குமாா் கூறுகையில், ‘பவானி ஆற்றில் இருந்து காரமடை பேரூராட்சிக்கு கூடுதலாக குடிநீா் எடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மழைநீரில் குழாய்கள் அடித்துச் சென்ால் கடந்த 6 மாதமாக பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது இப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தால் காரமடை பேரூராட்சிக்கு கூடுதலாக தினமும் 20 லட்சத்துக்கும் அதிகமான குடிநீா் கிடைக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT