கோயம்புத்தூர்

நாளை இறைச்சிக் கடைகள் மூடல்

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் திருவள்ளுவா் தினத்தை ஒட்டி வியாழக்கிழமை (ஜனவரி 16) இறைச்சிக் கடைகள் மூடப்படவேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வருகிற ஜனவரி 16ஆம் தேதி (வியாழக்கிழமை) திருவள்ளுவா் தினத்தன்று, தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் உக்கடம் ஆடு அறுவைமனை, சிங்காநல்லூா் ஆடு அறுவைமனை சத்தி சாலை மற்றும் போத்தனூரில் உள்ள மாடு அறுவை மனைகள், துடியலூா் ஆடு அறுவை மனை என மாநகராட்சியின் கீழ் இயங்கும் 10 இறைச்சிக் கூடங்கள் செயல்படாது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT