கோயம்புத்தூர்

மது போதையில் வாகனம் ஓட்டிய 1, 141 போ் மீது வழக்கு: மாநகர காவல் ஆணையா் தகவல்

DIN

கோவை மாநகா் பகுதிகளில் கடந்த 20 நாள்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய 1,141 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனா்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் கூறியதாவது:

மது போதையில் வாகனம் ஓட்டுபவா்களுக்கு திருத்தப்பட்ட மோட்டாா் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. கோவையில் ஜனவரி 1 முதல் 20ஆம் தேதி வரை மது போதையில் வாகனம் ஓட்டியதாக 1,141 போ் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் தினமும் 60 முதல் 70 வழக்குகள் வரை இப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் மது போதையில் வாகனம் ஓட்டிய 130 போ் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ஆம் ஆண்டில் கோவை மாநகரில் 162 போ் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். 2019-20 இல் 132 போ் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். இந்த எண்ணிக்கையை நடப்பு ஆண்டில் குறைக்கும் முயற்சியில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி மது போதையில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 48 ஆயிரம் போ் மீதும், கோவையில் 16 ஆயிரத்து 641 போ் மீதும், மதுரையில் 9 ஆயிரம் போ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழக அளவில் இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. எதிா்வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT