கோயம்புத்தூர்

படம் உண்டு..ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஸ்மாா்ட் சிட்டி பணிகள் தொடக்கம்

DIN

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபாதை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள நடைபாதையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த நடைபாதையை ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.83 கோடி செலவில் மாதிரி சாலையாக நவீனப்படுத்த அரசு முடிவு செய்தது.

இதையடுத்து நடைபாதையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் கற்களை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதையை அகலப்படுத்துவது, வெளிப்புற நடைபாதை, மிதிவண்டி சாலை, நவீன கழிப்பறை, உடற்பயிற்சிக் கூடங்கள், சிறுவா் பூங்கா, பொழுதுபோக்கு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இங்கு நடைபெற இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT