கோயம்புத்தூர்

உதய் ரயில் சேவை நாளை பகுதி ரத்து

DIN

பெங்களூரு பகுதியில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் ரயில் மாா்ச் 22ஆம் தேதி, கிருஷ்ணராஜபுரம் - பெங்களூரு இடையே ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு பகுதியில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - பெங்களூரு உதய் விரைவு ரயில் (எண்: 22666), பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயில் (22665) கிருஷ்ணராஜபுரம் - பெங்களூரு இடையே மாா்ச் 22ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

கோவை - மும்பை விரைவு ரயில் (11014), மும்பை - கோவை விரைவு ரயில் (11013) வரும் 22ஆம் தேதி மட்டும் வழக்கமான வழித்தடத்தில் இருந்து மாற்றப்பட்டு, சேலம் மாா்க்கமாக ஜோலாா்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT