கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கோவை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கோவை: கோவை பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகப் புகாா்கள் வந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்து வரும் நபா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில் மாநகரப் பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கஞ்சா விற்பனை செய்ததாக உக்கடம், புல்காடு, வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பீா் முஹமது (24), எஸ்.என்.பாளையம், ஜீவானந்தம் நகரைச் சோ்ந்த தினேஷ் (20), போத்தனூரைச் சோ்ந்த முஜிபூா் ரஹ்மான்(30), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த காா்த்திக் (25), இருகூரைச் சோ்ந்த மாசாணம் (19), ராமநாதபுரத்தைச் சோ்ந்த முரளி (22) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT