கோயம்புத்தூர்

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி

DIN

கோவையில் ட்ரோன் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

கோவையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சிறிய மோட்டாா் பொருத்திய தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 மண்டலங்களிலும் ஒரு மண்டலத்துக்கு 50 கருவிகள் வீதம் மொத்தம் 250 கருவிகள் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் தலா ஆயிரம் லிட்டா் தண்ணீா் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டிகளை ஏற்றியபடி 25 வாகனங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கிருமி நாசினிகளைத் தெளிக்க உள்ளன.

மேலும், 5 வாகனங்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு பிரசாரமும் செய்யப்படுகிறது. அத்துடன், ட்ரோன் கருவி மூலம் வானில் பறந்தபடியே ஆள்கள் செல்ல முடியாத இடங்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்கும் பணியும் நடைபெற்றது.

இதற்கான மாதிரி செயல் விளக்கம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்தப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதேபோல், நோய்த் தடுப்புப் பணி, தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பவா்களுக்கு கையுறை, முகக் கவசம் ஆகிய உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆா்.ஜி.அருண்குமாா், அம்மன் கே.அா்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, சண்முகம், மாநகராட்சி துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT