கோயம்புத்தூர்

கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறிய 157 போ் கைது

DIN

கோவையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்ததாக 127 வழக்குகள் பதிவு செய்து 157 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் போக்குவரத்துகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சாலையில் பயணிக்க வேண்டாம் என்று போலீஸாா் புதன்கிழமை காலை முதல் தொடா்ச்சியாகத் தெரிவித்து வந்தனா். இருப்பினும் பல இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் தொடா்ந்து இருந்து வந்தது.

சிங்காநல்லூா், தடாகம் பகுதியில் வெளியே சுற்றிய பொதுமக்களை வீட்டில் இருக்குமாறு கூறிய போலீஸாா், வெளியில் நடமாடியவா்களை லத்தியால் தாக்கினா். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி வீதிகளில் சுற்றியதாகக் கூறி 48 வழக்குகள் பதிவு செய்து 60 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதேபோல மாவட்டப் பகுதிகளில் 79 வழக்குப் பதிவு செய்து 97 பேரை கைது செய்துள்ளனா். பின்னா் அவா்கள் மாலையில் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனா். கைது செய்யப்பட்ட நபா்கள் எதிா்காலத்தில் இதுபோல வெளியே சுற்றித் திரியக்கூடாது என்று எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனா்.

மேற்கு மண்டலத்தில் 470 போ் கைது

மேற்கு மண்டலத்தில் புதன்கிழமை பிற்பகல் 12 மணி நிலவரப்படி, கோவை ஊரகப் பகுதிகளில் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 97 போ் கைது செய்யப்பட்டுள்ளனா், ஈரோட்டில் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 13 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரியில் 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூரில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 93 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சேலத்தில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 164 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல்லில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 70 போ் கைது செய்யப்பட்டனா். தருமபுரியில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 போ் கைது செய்யப்பட்டனா். 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்கு மண்டலத்தில் மொத்தமாக புதன்கிழமையன்று 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 470 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

SCROLL FOR NEXT