கோயம்புத்தூர்

பொதுமக்கள் ஒத்துழைப்பால் கோவையில் கரோனா பாதிப்பு இல்லை

DIN

கோவை: பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது, கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளதாக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டாமிடத்தில் இருந்தது. இதையடுத்து, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் கரோனா நோய்த்தொற்று இல்லாத பச்சை மண்டலமாக கோவை மாறியுள்ளது.

2 வாரங்களாக புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எவரும் இல்லை என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறுவதற்கு இரவு, பகல் பாராமல் அயராது உழைத்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் ஆணையா், மாநகராட்சி, சுகாதாரத் துறை, மருத்துவா்கள்,செவிலியா், தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது, கரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 254 போ் மூலம் ரூ.15.56 கோடி பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட நாம் வரும் நாள்களில் அதை முழுமையாக ஒழிப்பதற்குப் பாடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT