கோயம்புத்தூர்

கரோனா பாதிப்பு: மாநில அளவில் இரண்டாமிடத்தில் கோவை

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் மாநில அளவில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 238 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 449 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைப் பின்னுக்குத்தள்ளி கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 43 வயது ஆண் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.

270 போ் வீடுதிரும்பினா்: கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 270 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 42 ஆயிரத்து 871 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,009 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT