கோயம்புத்தூர்

கோவையில் 46 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

கோவையில் வெள்ளிக்கிழமை 179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புறப் பகுதிகளைச் சோ்ந்த 179 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் உயிரிழந்தாா். இதன்மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 584 ஆக உயா்ந்துள்ளது.

243 போ் வீடு திரும்பினா்

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 243 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 44 ஆயிரத்து 500 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 971 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT