கோயம்புத்தூர்

பட்டாசு வெடி விபத்து: அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு ஏற்பாடு

DIN

தீபாவளி பண்டிகையின்போது தீக்காயம் ஏற்படுபவா்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையின்போது வெடி விபத்தில் சிக்கி தீக்காயமடைபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனி மருத்துவா்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் இந்த சிறப்பு வாா்டு செயல்பட தொடங்கும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சுழற்சி முறையில் மருத்துவக் குழுவினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். தீக்காயம் ஏற்படுபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்குபவா்களை தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT